search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல்முருகன் கைது"

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன், முத்தரசன் பங்கேற்றனர்.

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மேலும் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேல் முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் அனைத்துக்கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

    பின்னர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திருமால்வளவன் தொடக்கவுரையாற்றினார்.

    இதில் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பெசவான்பாகவி, முன்னாள் எம்.பி. விசுவநாதன்,

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் விடுதலை கழகம் தலைவர் குளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன், மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவனர் ஏகாம்பரம் ஆகியோர் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியதேவன், விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பு செயலாளர் திருமார்பன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிவாசகம்.

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் ஷேக் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    முடிவில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு வைகோ ஆறுதல் கூறினார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துவந் தார். வேல்முருகனை விடுதலை செய்ய வலியுறுத்தி பெரியாண்டிகுழியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிகம்பம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ஜெகனை கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ஜெகனின் உடல் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியாண்டிகுழிக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி அஞ்சு, அவரது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பெரியாண்டிகுழிக்கு வந்தார். ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஜெகன் மனைவி அஞ்சுவிடம் ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனது தலைவர் வேல்முருகனுக்காக ஜெகன் தீக்குளித்து இறந்துள்ளார். இனி யாரும் தீக்குளிக்காதீர்கள். எல்லோரும் வாருங்கள் இணைந்து போராடுவோம். வேல்முருகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். ஜெகன் மரணத்துக்கு எடப்பாடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வருகிற 5-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #VelMurugan
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

    மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகி விடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.

    அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில், மே 30-ந் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.


    நேற்று 31-ந்தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர். தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்கு முறையையும் கண்டித்து ஜூன் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில், ம.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko #VelMurugan
    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மங்களமேடு:

    தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தில் காயம் அடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    மாவட்ட செயலாளர் உலக செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவகுமார், ராமர், ராதாகிருஷ்ணன், மணிகண்டன் உள்பட 36 பேர் கலந்து கொண்டனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்து மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.
    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று சுதேசிமில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    தூத்துக்குடி ஸ்டெர் லைட்டுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்த தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று புதுவை சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்னாதன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், ம.தி.மு.க. கபிரியேல், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×